தமிழ்நாடு

சட்டப்பேரவைத் தேர்தல்: சிறப்புப் பேருந்துகளில் இதுவரை 1,74,200 பேர் பயணம்

DIN

சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகளில் இதுவரை 1,74,200, பயணிகள் பயணித்துள்ளனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெறுகிறது. இதையொட்டி பொதுமக்கள் தங்களது சொந்த ஊா்களுக்கு சென்று வாக்களிக்க ஏதுவாக ஏப்.1 முதல் 5 நாள்களுக்கு சென்னையிலிருந்து நாள்தோறும் இயக்கக்கூடிய 2,225 பேருந்துகளுடன் சிறப்புப் பேருந்துகளாக 3,090 பேருந்துகள் என மொத்தம் 14,215 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. 
இந்தப் பேருந்துகள் மாதவரம் புதிய பேருந்து நிலையம், கே.கே. நகா் பேருந்து நிலையம், தாம்பரம் அறிஞா் அண்ணா பேருந்து நிலையம் (மெப்ஸ்), தாம்பரம் ரயில் நிலையப் பேருந்து நிறுத்தம், பூந்தமல்லி பேருந்து நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் இருந்து இயக்கப்படுகின்றன. 
இந்த நிலையில் சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகளில் இதுவரை 1,74,200, பயணிகள் பயணித்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. 
இதுகுறித்து போக்குவரத்து துறை வெளியிட்ட தகவலில், போக்குவரத்து துறையின் சார்பில்,  2021- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு பேருந்துகளின் இயக்கம் இன்று (02.04.2021) இரவு 07.00 மணி நிலவரப்படி, வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையான 2,225 பேருந்துகளில் 1650 பேருந்துகளும் 170 சிறப்புப் பேருந்துகள் என ஆக கடந்த (01/04/2021 முதல் 02/04/2021) இன்று இரவு 07.00 மணி வரையில் 4,355 பேருந்துகளில் 1,74,200, பயணிகள் பயணித்துள்ளனர். 
மேலும் இதுவரையில் 32,237 பயணிகள் முன்பதிவும் செய்துள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீனம்மா... மீனம்மா...

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம்

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு!

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

SCROLL FOR NEXT