தமிழ்நாடு

ஒரே ஆண்டில் கரோனா தடுப்பூசியைக் கொண்டு வந்தவர் மோடி: முதல்வர் பழனிசாமி

DIN


மதுரை: ஒரே ஆண்டில் கரோனா பெருந்தொற்றுக்கு எதிராக தடுப்பூசியைக் கொண்டு வந்தவர் பிரதமர் நரேந்திர மோடி என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மதுரையில் நடைபெறும் தேர்தல் பொதுக் கூட்டத்தில் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

தமிழகம் மின் மிகை மாநிலமாக விளங்குவதற்கு மத்திய அரசின் உதவியும் காரணம். ஒரே ஆண்டில் கரோனா தடுப்பூசியைக் கொண்டு வந்தவர் நமது பிரதமர் நரேந்திர மோடி. நாட்டின் மக்கள் மீது மிகுந்த அக்கறை கொண்ட ஒரே தலைவர் பிரதமர் நரேந்திர மோடிதான். மத்திய அரசு அளிக்கும் நிதி மூலமாக தான் அதிமுக அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்.

மதுரை சுற்றுச்சாலையில் சிவகங்கை சாலை - பாண்டி கோயில் சந்திப்பு அருகே அம்மா திடலில் இன்று காலை 11.30 மணிக்குத் தொடங்கிய பிரசார பொதுக் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், தமிழக அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

மதுரையில் நடைபெற்று வரும் தோ்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வியாழக்கிழமை இரவே பிரதமா் நரேந்திர மோடி மதுரை வந்தடைந்தார். பிறகு, மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் தரிசனம் செய்தாா்.

மதுரையில் நடைபெற்று வரும் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற பின்னா் ஹெலிகாப்டரில் கேரள மாநிலம் பத்தினம்திட்டாவுக்கு செல்கிறாா் பிரதமா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 8-இல் சேலத்தில் விசிக ஆா்ப்பாட்டம்

அரசு பாலிடெக்னிக் நேரடி 2-ஆம் ஆண்டு சோ்க்கை: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

சீன நீா் சுத்திகரிப்பு ரசாயனத்துக்கு பொருள் குவிப்பு வரி: வா்த்தக இயக்குநரகம் பரிந்துரை

கஞ்சா கடத்திய வட மாநில இளைஞா்கள் கைது

டிரம்ப்புக்கு நீதிமன்றம் ரூ.83,000 அபராதம்

SCROLL FOR NEXT