கிருஷ்ணகிரி நகரில் பிரசாரத்தை மீண்டும் தொடங்கி அதிமுக வேட்பாளர் கே அசோக்குமார். 
தமிழ்நாடு

கிருஷ்ணகிரியில் பிரசாரத்தை மீண்டும்  தொடங்கினார் அதிமுக வேட்பாளர் 

கிருஷ்ணகிரி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கே அசோக்குமார், உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் மீண்டும் பிரசாரத்தை சனிக்கிழமை தொடங்கினார்.

DIN


கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கே அசோக்குமார், உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் மீண்டும் பிரசாரத்தை சனிக்கிழமை தொடங்கினார்.

கிருஷ்ணகிரி சட்டப்பேரவைத் தொகுதியில் கே அசோக்குமார் அதிமுக வேட்பாளராக போட்டியிடுகிறார். அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட அனைத்து பகுதிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார். 

இந்த நிலையில் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த அவர், கிருஷ்ணகிரிக்கு திரும்பினார். 

கிருஷ்ணகிரி சட்டப்பேரவைத் தொகுதியில் ஏப்ரல் 6-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரம் ஏப்ரல் 4ஆம் தேதி வரை நிறைவடையவுள்ளது. இத்தகைய நிலையில், சென்னையிலிருந்து கிருஷ்ணகிரி திரும்பிய வேட்பாளர் கே. அசோக்குமார், கிருஷ்ணகிரி நகரில் பிரசாரத்தை மீண்டும் தொடங்கினார். கே அசோக் குமார் மீண்டும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது, கட்சித் தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரசாரத்தின் போது அதிமுக நகர செயலாளர் கேசவன் மற்றும் கூட்டணி கட்சியினர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய இணையத் தொடரில் சைத்ரா ரெட்டி!

ஓடிபி விவகாரம்- திமுகவின் வழக்கு தள்ளுபடி

டிரம்ப் விதித்த 25% வரி... ஆடைத் தயாரிப்புத் துறையில் 20 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம்!

காணாமல் போன 3 சிறுவர்கள் சடலமாக மீட்பு: உ.பி.யில் அதிர்ச்சி!

அடுத்த 20 ஆண்டுகளுக்கு படம் இயக்கவுள்ள இயக்குநர் பற்றி தெரியுமா?

SCROLL FOR NEXT