முகப்பு
தமிழ்நாடு

கோவை கல்வீச்சு: மாவட்ட ஆட்சியரிடம் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் மனு 

கோவையில் யோகி ஆதித்யநாத்தின் வருகையின்போது கடைகளின் மீது கல் வீசப்பட்டது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் கோவை தெற்கு பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் மனு அளித்துள்ளார்.  

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:55 PM
பகிர்:

கோவையில் யோகி ஆதித்யநாத்தின் வருகையின்போது கடைகளின் மீது கல் வீசப்பட்டது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் கோவை தெற்கு பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் மனு அளித்துள்ளார். 
கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளா் வானதி சீனிவாசனை ஆதரித்து உத்தரபிரதேச மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத் புதன்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டாா். அப்போது பேரணியில் ஈடுபட்ட பாஜக, ஹிந்து அமைப்பினா் பெரியகடை வீதி பகுதியில் இருந்த கடைகளை மூடக்கோரி தாக்கினா். 
இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. இதுகுறித்து பாஜக வேட்பாளா் வானதி சீனிவாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாவட்டத் தலைவா் அகமது கபீா், மாவட்ட ஆட்சியா் நடராஜனிடம் வியாழக்கிழமை மனு அளித்தாா். 
இந்த நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் கோவை தெற்கு பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் மனு அளித்துள்ளார். 
அதில், கோவையில் யோகி ஆதித்யநாத்தின் வருகையின்போது கடைகளின் மீது கல் வீசப்பட்டது தொடர்பாக உண்மையை கண்டறிய வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 
 
முழு கட்டுரையைப் படிக்க →