அவதூறு பேச்சு: ஆ.ராசா, தயாநிதி, லியோனி ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு
பெண்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக திமுக துணைப் பொதுச்செயலாளா் ஆ.ராசா, திமுக எம்.பி. தயாநிதி மாறன், பட்டிமன்றப் பேச்சாளா் திண்டுக்கல் லியோனி ஆகியோர் மீது
தேர்தல் பிரசாரத்தின்போது பெண்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக திமுக துணைப் பொதுச்செயலாளா் ஆ.ராசா, திமுக எம்.பி. தயாநிதி மாறன், பட்டிமன்றப் பேச்சாளா் திண்டுக்கல் லியோனி ஆகியோர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதுதொடா்பாக, சென்னையில் தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம் அதிமுக பெண்கள் வழக்குரைஞா் பிரிவு கடந்த 29ஆம் தேதி புகார் தெரிவித்திருந்தனர்.
இந்த புகாரைத் தொடர்ந்து திமுக துணைப் பொதுச்செயலாளா் ஆ.ராசா, திமுக எம்.பி. தயாநிதி மாறன், பட்டிமன்றப் பேச்சாளா் திண்டுக்கல் லியோனி ஆகியோர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஆபாசமாக திட்டுதல், கலகம் செய்ய தூண்டி விடுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.