முகப்பு
தமிழ்நாடு

புதுச்சேரியில் 48 மணி நேரத்திற்கு 144 தடை உத்தரவு!

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலையொட்டி அமைதி மற்றும் தீங்கு விளைவிக்கும் செயல்களை தடுக்கும் நடவடிக்கையாக 48 மணி நேரத்திற்கு 144 உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தன

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:55 PM
மாவட்ட தேர்தல் அதிகாரி பூர்வா கார்க்
பகிர்:

புதுச்சேரி:  புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலையொட்டி அமைதி மற்றும் தீங்கு விளைவிக்கும் செயல்களை தடுக்கும் நடவடிக்கையாக 48 மணி நேரத்திற்கு 144 உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதுச்சேரி சட்டப்பேரவையின் 30 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி நடைபெறுகின்றன. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

இதுகுறித்து புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரி பூர்வா கார்க் செய்தியாளர் கூறியதாவது: 
புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 6 ஆம் தேதி 48 மணிநேரத்திற்கு முன்பு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

அதன்படி, அமைதி மற்றும் தீங்கு விளைவிக்கும் செயல்களுக்கு தடுக்கும் நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. "சட்டவிரோதமாக அரசியல் கட்சிகள் ஒன்று கூடுதல், ஆயுதங்கள், கம்புகள், பேனர்கள், போஸ்டர்கள், பதாகைகள் வைத்திருத்தல், கோஷம் எழுப்புதல், ஒலிபெருக்கிகள் பயன்படுத்துதல், அமைதிக்கு தீங்கு விளைவிக்கும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கப்படுகிறது. 

"48 மணி நேர காலகட்டத்தில் வீடு வீடாக பிரசாரம் செய்வதை தடைசெய்யவோ அல்லது பொது ஊரடங்கு உத்தரவு, மத விழாக்கள், திருமணங்கள், இறுதி சடங்குகள் அல்லது வாக்குப்பதிவு தொடர்பான பிற நடவடிக்கைகளுக்கு பொருந்தாது. மக்கள் அதிகயளவில் வந்து தங்களது வாக்குகளை செலுத்த வர வேண்டும்" என்று கார்க் கூறினார்.

மேலும் புதுச்சேரியில் இதுவரை ரூ.42 கோடியே 12 லட்சத்து 6 ஆயிரம் மதிப்பிலான பணம், நகை, பரிசு பொருள்கள் பறிமுதல் செய்ப்பட்டுள்ளதாக என்று கார்க் கூறினார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →