சிவகங்கை இந்திய கம்யூ. வேட்பாளர் எஸ்.குணசேகரனுக்கு கரோனா
சிவகங்கை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எஸ்.குணசேகரனுக்கு கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எஸ்.குணசேகரனுக்கு கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை சட்டப்பேரவைத் தொகுதி திமுக கூட்டணிக் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் எஸ். குணசேகரன் போட்டியிடுகிறார். அவருக்கு சில நாட்களாக உடல்நிலை சரியில்லாததால் கரோனா பரிசோதனை செய்துள்ளார். இதில் அவருக்கு சனிக்கிழமை கரோனா உறுதி செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து அவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து, அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களுக்கும் கரோனா பரிசோதனை செய்ய சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.