தமிழ்நாடு

அதிமுக பிரமுகர் வீட்டில் உரிய ஆவணமின்றி வைத்திருந்த 3,53,000 பணம் பறிமுதல்

DIN

சென்னப்பநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் வீட்டில் உரிய ஆவணமின்றி வைத்திருந்த 3,53,000 பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

ஊத்தங்கரை சட்டப்பேரவை தனி தொகுதிக்குள்பட்ட சென்னப்பநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் அதிமுக முன்னாள் ஊராட்சிமன்ற துணைத் தலைவர் ராமு. இவர் வாக்குக்குப் பணம் கொடுக்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளனர். 

தகவலின் பேரில் கட்டுப்பாட்டு அறை அலுவலர் தேர்தல் பறக்கும் படை அலுவலர் மோகனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சென்னப்ப நாயக்கனூரில் உள்ள ராமு வீட்டிற்கு ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணிக்கு விரைந்து சென்ற மோகன் தலைமையிலான அலுவலர்கள் சோதனை செய்தனர். 

சோதனையில் ராமு விட்டில் உரிய ஆவணம் இன்றி இருந்த 2,33,500 ரூபாய், வாக்காளர் அடையாள அட்டைகள், ஆதார் அட்டைகள், பூத் ஸ்லிப் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த பணத்தை தேர்தல் அலுவலர் சேதுராமலிங்கம் முன்னிலையில் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் அதே வீட்டில் மீண்டும் பணம் வைத்திருப்பதாகத் தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் சந்தோஷ்குமார் தலைமையிலான அலுவலர்கள் விடியற்காலை 4 மணியளவில் மீண்டும் சோதனை செய்தனர். 

ராமு வீட்டில் உரிய ஆவணம் இல்லாத ரூ.1,20,200 பணம் பறிமுதல் செய்யப்பட்டு தேர்தல் நடத்தும் அலுவலர் சேதுராமலிங்கம் முன்னிலையில் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

உதகை, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு: நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயம்

SCROLL FOR NEXT