முகப்பு
தமிழ்நாடு

கனமழை: மசூதியின் கொட்டகை விழுந்து முதியவர் பலி

கிருஷ்ணகிரியில் பலத்த காற்றுடன் மழை பெய்ததில் மசூதியின் தொழுகைக் கொட்டகை இடிந்து விழுந்ததில் ஜாபர் (60) என்ற முதியவர் திங்கள்கிழமை உயிரிழந்தார்

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:56 PM
பகிர்:


கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் பலத்த காற்றுடன் மழை பெய்ததில் மசூதியின் தொழுகைக் கொட்டகை இடிந்து விழுந்ததில் ஜாபர் (60) என்ற முதியவர் திங்கள்கிழமை உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் முதியவர்கள், பெண்கள், சிறுவர்கள், நோயாளிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாயினர். 

இந்த நிலையில் திங்கள்கிழமை மாலை 5 மணி அளவில் பலத்த காற்றுடன் மழை பெய்யத் தொடங்கியது. இதில் கிருஷ்ணகிரி பழையபேட்டையிலுள்ள அகஷா (Aqsa) மசூதியின் தொழுகை கொட்டகை இடிந்து விழுந்தது.

அப்போது தொழுகையில் ஈடுபட்டிருந்த 20க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கினர். இதில் பலத்த காயமடைந்த ஜாபர் பலத்த காயமடைந்தார்.

தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் நிகழ்விடத்திற்கு விரைந்து வந்து பலத்த காயமடைந்த அவரை மீட்டு கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பினர்.

அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இதுதவிர பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து மின் கம்பிகள் மீது விழுந்தன. மரங்கள் சாய்ந்தன. இதனால், கிருஷ்ணகிரி நகரில் மின் விநியோகம் தடைபட்டது. மின்வாரிய ஊழியர்கள் மரக் கிளைகளை அப்புறப்படுத்தி மீண்டும் மின் விநியோகம் வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →