முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் 11 மணி நிலவரப்படி 26.29% வாக்குப்பதிவு; நாமக்கல் முதலிடம்

தமிழகத்தில் முற்பகல் 11 மணி நிலவரப்படி 26.29 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:56 PM
11 மணி நிலவரப்படி 26.29% வாக்குப்பதிவு; நாமக்கல் முதலிடம்
பகிர்:


சென்னை: தமிழகத்தில் முற்பகல் 11 மணி நிலவரப்படி 26.29 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இன்று காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு சுமார் 4 மணி நேரத்துக்கும் மேலாக அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது.  9 மணி வரையில் 13.80 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், அடுத்த இரண்டு மணி நேரத்தில் இந்த சதவீதமானது இரட்டிப்பாகியுள்ளது. எனவே, ஆரம்பம் முதல் கடந்த 4 மணி நேரமாக வாக்குப்பதிவு விறுவிறுப்பாகவே நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 28.33 சதவீதமும், குறைந்தபட்சமாக திருநெல்வேலியில் 20.98 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.

9 மணி நிலவரப்படி அதிகபட்ச வாக்குகள் பதிவாகியிருந்த திண்டுக்கல்லில் 27.95 சதவீதமும், சென்னையில் 23.67 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குமான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது.

காலை முதலே ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், மநீம கட்சித் தலைவர் கமல், நடிகர்கள் ரஜினி, அஜித், விஜய் உள்ளிட்டோரும் தங்களது வாக்குகளை செலுத்தியுள்ளனர்.

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், 11 மணி நிலவரப்படி எவ்வளவு வாக்குகள் பதிவாகின என்ற தகவலை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு சற்று தாமதமாக 11.30 மணியளவில் வெளியிட்டார்.

முழு கட்டுரையைப் படிக்க →