முகப்பு
தமிழகத்தில் 5 மணி நிலவரப்படி 63.60% வாக்குப்பதிவு
தமிழ்நாடு

தமிழகத்தில் 5 மணி நிலவரப்படி 63.60% வாக்குப்பதிவு

தமிழகத்தில் மாலை 5 மணி நிலவரப்படி 63.60 சதவிகித வாக்குகள் பதிவாகியிருப்பதாக தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு

தமிழகத்தில் 5 மணி நிலவரப்படி 63.60% வாக்குப்பதிவு

தமிழகத்தில் மாலை 5 மணி நிலவரப்படி 63.60 சதவிகித வாக்குகள் பதிவாகியிருப்பதாக தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:57 PM
தமிழகத்தில் 5 மணி நிலவரப்படி 63.60% வாக்குப்பதிவு
பகிர்:

தமிழக சட்டப்பேரவைக்கு இன்று காலை தொடங்கி வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் மாலை 5 மணி நிலவரப்படி 63.60 சதவிகித வாக்குகள் பதிவாகியிருப்பதாக தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு நிலவரங்களை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி 2 மணி நேரத்துக்கு ஒரு முறை அறிவித்து வருகிறார்.

அதன்படி, இன்று மாலை 5 மணியளவில் தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 63.60 சதவிகித வாக்குகள் பதிவாகியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 70.79 சதவிகித வாக்குப் பதிவும், குறைந்தபட்சமாக நெல்லையில் 50.05 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளது. சென்னையில் இதுவரை 55.31 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →