முகப்பு
தமிழ்நாடு

போடி: ஓ.ப.ரவீந்திரநாத் காரை அடித்து நொறுக்கிய கும்பல்: காவலர்கள் குவிப்பு

போடி அருகே தேனி மக்களவை உறுப்பினரின் காரை அடித்து நொறுக்கிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தேனி எஸ்.பி. தலைமையில் போலீசார் குவிக்கப் பட்டுள்ளனர்.

தமிழ்நாடு

போடி: ஓ.ப.ரவீந்திரநாத் காரை அடித்து நொறுக்கிய கும்பல்: காவலர்கள் குவிப்பு

போடி அருகே தேனி மக்களவை உறுப்பினரின் காரை அடித்து நொறுக்கிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தேனி எஸ்.பி. தலைமையில் போலீசார் குவிக்கப் பட்டுள்ளனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:57 PM
பகிர்:

போடி: போடி அருகே தேனி மக்களவை உறுப்பினரின் காரை அடித்து நொறுக்கிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தேனி எஸ்.பி. தலைமையில் போலீசார் குவிக்கப் பட்டுள்ளனர்.

போடி சட்டப் பேரவை தொகுதி தேர்தலில் துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் போட்டியிடுவதைத் தொடர்ந்து அவரது மகளான மக்களவை உறுப்பினர் ஓ.ப.ரவீந்திரநாத் வாக்குச்சாவடிகள் ஆய்வு செய்தார்.

போடி பெருமாள் கவுண்டன்பட்டியில் வாக்குச் சாவடியை ஆய்வு செய்ய ஊருக்குள் நுழைந்த போது திடீரென நாலாபக்கமிருந்தும் கற்களால் சிலர் அவரது காரை தாக்கினர்.

இதில் அவரது காரின் முன்பக்கம், பின் பக்கம், பக்கவாட்டு கண்ணாடிகள் சேதமடைந்தன. சத்தம் கேட்டு அவருடன் பாதுகாப்புக்கு வந்த தொண்டர்கள்  இறங்கி வருவதற்குள் கற்களை வீசிய மர்ம நபர்கள் தப்பி விட்டனர்.

இதனால் பதட்டமான சூழல் ஏற்பட்டது. இதனையடுத்து தேனி எஸ்.பி. சாய் சரண் தேஜஸ்வி, போடி டி.எஸ்பி. பார்த்திபன் தலைமையில்  காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். 

அதனையடுத்து வேறு வாகனத்தில் மக்களவை உறுப்பினர் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டார்.  காவல்துறையினர் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →