போடியில் முதியவர்கள் சக்கர நாற்காலியில் வந்து வாக்களிக்க ஆர்வம்
போடியில் வயதான முதியவர்கள் சக்கர நாற்காலியில் வந்து வாக்களிக்க ஆர்வம் காட்டினர்.
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:26 AM
போடியில் வயதான முதியவர்கள் சக்கர நாற்காலியில் வந்து வாக்களிக்க ஆர்வம் காட்டினர்.
போடிநாயக்கனூர் சட்டப்பேரவை தொகுதியில் காலை முதலே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
போடி அண்ணா நினைவு நடுநிலைப் பள்ளியில் 98 வயது மூதாட்டியும், இவரது சகோதரி 95 வயது மூதாட்டியும் வாக்களிக்க வந்தனர். இவர்களுக்கு காவல் ஆய்வாளர் முத்துக்குமார் சக்கர நாற்காலி ஏற்பாடு செய்தார். இதனையடுத்து மூதாட்டிகள் வாக்களித்துச் சென்றனர்.
Advertisement
இதேபோல் 80 வயது முதியவர் நடக்க முடியாமல் வந்தார். அவருக்கும் சக்கர நாற்காலி வழங்கப்பட்டது. இதனையடுத்து அவர் வாக்களித்துச் சென்றார்.