முகப்பு
தமிழ்நாடு

பாமக நிறுவனர் ராமதாஸ் குடும்பத்துடன் வாக்களித்தார்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகரில்  மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள ஸ்ரீ மரகதாம்பிகை ஆரம்பப்பள்ளியில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்  குடும்பத்தாருடன் வாக்களிதார்.

Updated On : 6 ஏப்ரல், 2021 at 11:01 AM
பாமக நிறுவனர் ராமதாஸ் குடும்பத்துடன் வாக்களித்தார்
பகிர்:

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகரில்  மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள ஸ்ரீ மரகதாம்பிகை ஆரம்பப்பள்ளியில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்  குடும்பத்தாருடன் வாக்களிதார்.

தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இன்று காலை தொடங்கிய வாக்குப்பதிவில், பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களித்து வருகிறார்கள். வாக்குப்பதிவு 7 மணிக்குத் தொடங்கினாலும் காலை 6 மணி முதலே பல வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் வரிசையில் நின்று வாக்களித்ததைக் காண முடிந்தது.

Advertisement

தமிழகத்தில் பொதுவாக அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை முதலே ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், மநீம கட்சித் தலைவர் கமல், நடிகர்கள் ரஜினி, அஜித், விஜய் உள்ளிட்டோரும் தங்களது வாக்குகளை செலுத்தியுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.