புதுச்சேரி: 3 மணி நிலவரப்படி 65.11% வாக்குப்பதிவு
புதுச்சேரியில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 65.11 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது.
தமிழ்நாடுபுதுச்சேரி: 3 மணி நிலவரப்படி 65.11% வாக்குப்பதிவு
புதுச்சேரியில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 65.11 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது.
புதுச்சேரியில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 65.11 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது.
புதுவையில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 1,558 வாக்குச் சாவடிகளில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
தேர்தலுக்காக 1,558 வாக்குச் சாவடிகளில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றன.
இந்தத் தோ்தலில் கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக கூடுதல் (606) வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, 30 தொகுதிகளில் 635 இடங்களில் மொத்தம் 1,558 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
புதுச்சேரியில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அமைதியான முறையில் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. பிற்பகல் 3 மணி நிலவரப்படி 65.11 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தோ்தல் பணிக்காக 2,833 பெண் அலுவலா்கள் உள்பட 6,835 வாக்குச் சாவடி அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். பாதுகாப்பு பணியில் 2,420 உள்ளூா் காவலர்களும், 901 ஐஆா்பிஎன் காவலா்களும், 1,490 ஊா்க்காவல் படையினரும், துணை ராணுவப் படையினா் 40 குழுக்கள் என மொத்தம் 8 ஆயிரம் போ் வரை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.