சிவகங்கை: 1,679 வாக்குச்சாவடிகளில் வாக்குப் பதிவு தொடங்கியது
காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை(தனி) ஆகிய 4 தொகுதிகளில் உள்ள 1,679 வாக்குப் பதிவு மையங்களில் செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது.
தமிழ்நாடுசிவகங்கை: 1,679 வாக்குச்சாவடிகளில் வாக்குப் பதிவு தொடங்கியது
காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை(தனி) ஆகிய 4 தொகுதிகளில் உள்ள 1,679 வாக்குப் பதிவு மையங்களில் செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது.
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை(தனி) ஆகிய 4 தொகுதிகளில் உள்ள 1,679 வாக்குப் பதிவு மையங்களில் செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது.
கரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக வாக்காளர்களுக்கு கிருமி நாசினி, கையுறை உள்ளிட்ட கரோனா முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
சிவகங்கை மாவட்டத்தில் 5,83,105 ஆண் வாக்காளர்கள், 6,03,926 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர் 64 பேர் என மொத்தம் 11,81,095 பேர் வாக்களிக்க உள்ளனர்.
மாவட்டத்தில் 163 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. அவை அனைத்துக்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மாவட்டம் முழுவதும் தேர்தல் பணியில் 11 ஆயிரம் பேர் ஈடுபட்டுள்ளனர். மேலும், 3900 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.