தமிழ்நாடு

தேர்தல் ஆணையத்திடம் உதயநிதி இடைக்கால விளக்கம்

DIN


தேர்தல் பிரசாரத்தின்போது அருண் ஜேட்லி, சுஷ்மா ஸ்வராஜ் மரணம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய புகாரில் திமுக இளைஞரணித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் ஆணையத்திடம் விளக்கமளித்துள்ளார்.

சேப்பாக்கம் தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தின்போது மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர்கள் அருண் ஜேட்லி, சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோரின் மரணம் குறித்து சரச்சைக்குரிய வகையில் பேசியதாக தேர்தல் ஆணையத்திடம் பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் ஏப்ரல் 7-க்குள் (இன்று) விளக்கமளிக்குமாறு உதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.

இந்த நிலையில், தேர்தல் ஆணையத்திடம் உதயநிதி ஸ்டாலின் இதுகுறித்து இடைக்கால விளக்கமளித்துள்ளார். மேலும் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள உதயநிதி, முழு உரை மற்றும் புகாரின் நகல் கிடைத்தவுடன் விரிவாக விளக்கமளிக்க அவகாசம்கோரி தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரான் அதிபா் ரய்சி மறைவு: பிரதமா் மோடி இரங்கல்; இந்தியாவில் ஒருநாள் துக்கம்

குமாரபாளையத்தில் கனமழை

‘சிறப்புக் குடிமக்கள்’ என கருதுவதை ஏற்க முடியாது: சிறுபான்மையினா் குறித்து பிரதமா் மோடி

பரமத்தி வேலூரில்...

ராசிபுரம் கடைவீதியில் அதிகரிக்கும் வாகன நெரிசல்

SCROLL FOR NEXT