தமிழ்நாடு

விழுப்புரம்-புருலியாவுக்கு சிறப்பு ரயில்

DIN

விழுப்புரத்தில் இருந்து மேற்கு வங்கம் மாநிலத்துக்கு உள்பட்ட புருலியாவுக்கு சிறப்பு ரயில் இயக்க ரயில்வே வாரியம் அனுமதி வழங்கியுள்ளது.

விழுப்புரத்தில் இருந்து புதன்கிழமை, சனிக்கிழமைகளில் நண்பகல் 12.05 மணிக்கு வாரம் இருமுறை அதிவிரைவு சிறப்பு ரயில் (06170) புறப்பட்டு, மறுநாள் இரவு 10.35 மணிக்கு மேற்குவங்க மாநிலம் புருலியாவை அடையும். இந்த ரயிலின் சேவை மே 5-ஆம் தேதி தொடங்குகிறது.

மறுமாா்க்கமாக, புருலியாவில் இருந்து வெள்ளி, திங்கள்கிழமைகளில் காலை 10 மணிக்கு வாரம் இருமுறை அதிவிரைவு சிறப்பு ரயில் (06169) புறப்பட்டு, மறுநாள் இரவு 7 மணிக்கு விழுப்புரத்தை வந்தடையும். இந்த ரயிலின் சேவை மே 7-ஆம் தேதி தொடங்குகிறது.

இதுதவிர, விழுப்புரம்-மேற்குவங்கம் மாநிலம் கராக்பூருக்கு வாராந்திர அதிவிரைவு ரயில் இயக்கப்படவுள்ளது.

முழுவதும் முன்பதிவு பெட்டிகளை கொண்ட இந்த சிறப்பு ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை (ஏப்.11) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

SCROLL FOR NEXT