பல்லடம் தொகுதி அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.எம். ஆனந்தன் 
தமிழ்நாடு

பல்லடம் அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தனுக்கு கரோனா

திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளருக்கு கரோனா நோய்த்தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

DIN



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளருக்கு கரோனா நோய்த்தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் (64), போட்டியிட்டார். இவர் சட்டப்பேரவைத் தேர்தலின் போது, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் கடந்த 2 நாள்காளக காய்ச்சல், சளியால் அவதிப்பட்டுள்ளார்.  

இதையடுத்து, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டார். இதில், அவருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

மேலும், அவருடன் தொடர்பில் இருந்த நபர்களுக்கும் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஜய் பிரசாரம் 2 வாரங்களுக்கு ஒத்திவைப்பு: தவெக

ரூ. 12,490 கோடி! உலகத்தின் பணக்கார நடிகரானார் ஷாருக்கான்!

அன்பின் வழியில்... அக்‌ஷதா!

பட்டுப் புன்னகை... சரண்யா துராடி!

நினைவின் மயக்கம்... ஸ்ரீகெளரி பிரியா!

SCROLL FOR NEXT