நெடுங்காடு காங்கிரஸ் வேட்பாளருக்கு கரோனா தொற்று
நெடுங்காடு (தனி) சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரும், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான ஏ.மாரிமுத்துக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு (தனி) சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரும், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான ஏ.மாரிமுத்துக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த 6-ஆம் தேதி நடைபெற்றது. முன்னதாக தமது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர பிரசாரம் மற்றும் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்புப் பணியில் அவர் ஈடுபட்டிருந்தார்.
தேர்தல் பணிகள் நிறைவடைந்த நிலையில், காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை அவர் கரோனா பரிசோதனை செய்து கொண்டார். அதில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையொட்டி அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.
Advertisement
அவர் ஆரோக்கியமாக இருப்பதாக அவரது மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.