தமிழ்நாடு

சூரப்பா மீதான புகார் குறித்த விசாரணை 80% நிறைவு: நீதியரசர் கலையரசன்

DIN

ஓய்வுபெற்ற  அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான புகார் குறித்த விசாரணை 80% நிறைவடைந்துள்ளதாக விசாரணைக்குழு தெரிவித்துள்ளது. 

தமிழக அரசின் அனுமதியின்றி அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்புத் தகுதி வழங்குமாறு மத்திய அரசுக்கு விண்ணப்பித்தது, அரியர் தேர்வு விவகாரத்தில் அரசின் நிலைப்பாட்டிற்கு எதிராக செயல்பட்டது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த சூரப்பா மீது முன்வைக்கப்பட்டது, 

இதையடுத்து, அவர் மீதான புகாரை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான குழுவை நியமித்து 3 மாதத்துக்குள் இதுகுறித்து விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க மத்திய அரசு உத்தரவிட்டது. 

அதன்படி சூரப்பா மீதான புகார் குறித்த விசாரணை 80% நிறைவடைந்துவிட்டதாகவும், சூரப்பா பதவியிலிருந்து ஓய்வு பெற்றாலும் விசாரணை தொடரும், அவர் எங்கு சென்றாலும் நோட்டீஸ் வழங்கப்படும் என்று நீதியரசர் கலையரசன் தெரிவித்துள்ளார். 

மேலும், அடுத்த வாரம்ஸ் சூரப்பாவிடம் விசாரணை நடத்தப்படும், அவர் மீதான புகார்களுக்கு அவர் நேரடியாகவோ அல்லது எழுத்துப்பூர்வமாகவோ பதில் அளிக்கலாம். அடுத்த 10 முதல் 15 நாள்களுக்குள் விசாரணைக்கான அறிக்கை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். 

மூன்று ஆண்டு கால பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் சூரப்பா அண்ணா பல்கலை. துணைவேந்தர் பதவியிலிருந்து நேற்று ஓய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆலங்குளம்: மல்லிகைப்பூ விலை வீழ்ச்சி

பாவூா்சத்திரத்தில் நாட்டின நாய்கள் ஆராய்ச்சி மைய கட்டுமான பணிகளை விரைவுபடுத்த திமுக வலியுறுத்தல்

குழந்தைத் திருமணம்: விழிப்புணா்வு பிரசாரம்

மஞ்சக்குடியில் மே 13-இல் உயா்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி

ஆலங்குளம் அருகே மொபெட் - லாரி மோதல்: முதியவா் பலி

SCROLL FOR NEXT