கோப்புப்படம் 
தமிழ்நாடு

யுகாதி பண்டிகை: புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து

யுகாதி பண்டிகையை முன்னிட்டு தெலுங்கு மக்களுக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

DIN

யுகாதி பண்டிகையை முன்னிட்டு தெலுங்கு மக்களுக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், தெலுங்கை தாய் மொழியாக கொண்ட சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். மனதளவில் ஒன்றுபட்டு நம் நாட்டின் ஆரோக்கியத்திற்காக கரோனா தடுப்பு பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி இந்த யுகாதியை கொண்டாடுவோம்.
தகுதியானவர்கள் கரானா தடுப்பூசி செலுத்திக் கொண்டு கரோனா பரவாமல் தடுத்து அரசின் முயற்சிகளுக்கு துணை நிற்போம். அனைவருக்கும் மகிழ்ச்சியும், ஆரோக்கியமும் நிலைத்திருக்க எனது யுகாதி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

600 பேருக்கு வேலைவாய்ப்பு! வேலூரில் மினி டைடல் பூங்கா திறப்பு!

ஆஷஸ் தொடருக்கான ஆஸி. அணி அறிவிப்பு! கேப்டனாக ஸ்மித்.. மீண்டும் மார்னஸ் லபுஷேனுக்கு வாய்ப்பு!

பிக் பாஸ் 9 நேரலையும் எடிட் செய்யப்படுகிறதா?

பாஜகவின் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜேன் ஏஜேபி கட்சியில் இணைந்தார்!

வேல் இருந்தால், ஒளியுண்டு... சாக்‌ஷி அகர்வால்!

SCROLL FOR NEXT