காஞ்சிபுரம்: ரயில்வே ஊழியர் வீட்டில் 60 பவுன் நகைகள் கொள்ளை
காஞ்சிபுரத்தில் ரயில்வே ஊழியர் வீட்டில் 60 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
காஞ்சிபுரத்தில் ரயில்வே ஊழியர் வீட்டில் 60 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
காஞ்சிபுரம் அருகே சித்தேரிமேடு கிராமத்தில் பஜனை கோயில் தெருவில் வசித்து வருபவர் துரையரசன்( 38 ). இவர் ரயில்வே சிக்னல் டெக்னிசியன் ஆக பணிபுரிந்து வருகிறார்.
இவர் வீட்டில் தனது குடும்பத்தினருடன் தூங்கிக்கொண்டிருந்த போது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து பீரோ சாவியை எடுத்து பீரோவில் இருந்த 60 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர்.
Advertisement
அதிகாலை எழுந்து பீரோ திறந்து கிடப்பதைப் பார்த்த துரையரசன் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார்.
தகவலறிந்து காஞ்சிபுரம் எஸ்பி சண்முகப்பிரியா டி எஸ் பி எஸ் மணிமேகலை ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
போலீஸ் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு சிறிது தூரம் ஓடி நின்றது. தடயவியல் நிபுணர்களும் தடயங்களை சேகரித்தனர்.
சம்பவம் தொடர்பாக பாலுசெட்டி சத்திரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சம்பந்தபட்ட குற்றவாளிகளை தேடி வருகின்றனர். நகைகளை திருடிய நபர்களை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது.