முகப்பு
தமிழ்நாடு

4 வழிச்சாலை பணிக்காக மரங்கள் வெட்டும் பணி: கிராமத்தினர் எதிர்ப்பு

சீர்காழி அருகே நான்கு வழிச்சாலை பணிக்காக 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த புளியமரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டன. பலன் தரும் மரங்களை வெட்ட எதிர்ப்பு தெரிவித்து பணியை தடுத்து நிறுத்திய கிராமமக்கள்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:00 PM
100 ஆண்டுகள் பழமை வாய்ந்த புளியமரங்கள் வெட்டி சாய்ப்பு
பகிர்:

சீர்காழி அருகே நான்கு வழிச்சாலை பணிக்காக 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த புளியமரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டன. பலன் தரும் மரங்களை வெட்ட எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் அப்பணியை தடுத்து நிறுத்தினர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடம் முதல் நாகப்பட்டினம் வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் துவங்கபட்டது.

இதற்காக கையகபடுத்திய விளைநிளங்கள் வீடுகள் மரங்கள் உள்ளிட்டவைகளுக்கு போதிய தொகை வழங்காதலும் அதிக வீடுகள் பாதிக்காபட்டதாலும் தொடர் போராட்டங்களால் இத்திட்டம் நிறுத்தி வைக்கபட்டிருந்தது.

இந்நிலையில் சீர்காழி அருகே காரைமேடு கிராமத்தில் இன்று காலை முதல் சாலையோர புளியமரங்களை வெட்டி அகற்றும் பணிகள் தொடங்கியது.

இயந்திரங்களை கொண்டு சில நிமிடங்களில் 10 க்கும் மேற்பட்ட மரங்கள் வேறோடு சாய்க்கபட்டது. தகவல் அறிந்த கிராமமக்கள் மரம் வெட்டும் பணியை தடுத்து நிறுத்தினர்.

100 ஆண்டுகள் கடந்து காலம் காலமாக கிராம மக்களுக்கு பயன்தரக்கூடிய மரங்களை முன்னறிவிப்பின்றி வெட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பணியை தடுத்தனர்.

ஊராட்சியின் சார்பாக கிராம மக்களின் புளி தேவைக்காக புளிய மரங்கள் ஏலம் விடப்பட்டிருந்த நிலையில் முன்னறிவிப்பு இன்றி மரங்கள் வெட்டபட்டுள்ளதாக குற்றம் சாட்டினர்.

இதனையடுத்து மரம் வெட்டும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

முழு கட்டுரையைப் படிக்க →