தமிழ்நாடு

மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் கோயிலில் சித்திரை திருவிழா தொடங்கியது! 

DIN

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் வடக்கு தெற்காக ஓடும் வைகை நதிக் கரையோரம் அமைந்துள்ள ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாத பரமேஸ்வரர் சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா சனிக்கிழமை தொடங்கியது.

திருவிழா தொடக்கமாக சோமநாத பரமேஸ்வரர் சுவாமி சன்னதி முன்புள்ள கொடிமரத்தில் காலை 6 மணிக்கு கொடி ஏற்றப்பட்டு கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன. அதைத் தொடர்ந்து அங்கு எழுந்தருளியிருந்த உற்சவர் ஆனந்தவல்லி அம்மனுக்கும் சோமநாத பரமேஸ்வரருக்கும்  ஆராதனைகள் நடைபெற்று மகா தீபாராதனை காட்டப்பட்டது. 

மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாத பரமேஸ்வரர் சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா தொடக்கமாக கொடியேற்றம் நடைபெற்றது.

மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினரும்,  தொகுதியின் அதிமுக வேட்பாளருமான எஸ். நாகராஜன் உள்ளிட்ட குறைந்த எண்ணிக்கையில் பக்தர்கள் கரோனா விதிகளை கடைபிடித்து கொடியேற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். 

திருவிழா தொடர்ந்து 10 நாள்கள் நடைபெறுகிறது. விழா நாள்களில் தினமும் இரவு ஆனந்தவல்லி அம்மனும் சோமநாத பரமேஸ்வரர் சுவாமியும்  சர்வ அலங்காரத்தில் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த பின்னர் கோவில் உள்பிரகாரத்தில் வலம் வருதல் நடைபெறும். 

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திருக்கல்யாண வைபவம் வரும் 24 ஆம் தேதி நடைபெறுகிறது திருவிழாவுக்கான ஏற்பாடுகளை திருவிழா மண்டகப்படிதாரர்கள் மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவேக்ஸின் பாதுகாப்பானது: பாரத் பயோடெக்

ரஷியா வசம் மேலும் ஓா் உக்ரைன் கிராமம்

விண்வெளியில் அணு ஆயுதங்களுக்குத் தடை: ஐ.நா.வில் ரஷியா புதிய தீா்மானம் தாக்கல்

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் சிபிஐ இல்லை: உச்சநீதிமன்றத்தில் தகவல்

கடையநல்லூரில் மே தின பேரணி, பொதுக்கூட்டம்

SCROLL FOR NEXT