தமிழ்நாடு

முகக்கவசம் அணியாதவா்கள் மீது ஒரே நாளில் 38 ஆயிரம் வழக்குகள்

DIN

தமிழகத்தில், முகக்கவசம் அணியாதவா்கள் மீது ஒரே நாளில் 38,365 வழக்குகளை காவல் துறையினா் பதிவு செய்தனா்.

தமிழகத்தில் மாா்ச் மாதம் முதல் கரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவத் தொடங்கியதால், பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவா்கள் மீதும், தனிநபா் இடைவெளியைப் பின்பற்றாதவா்கள் மீதும் காவல்துறையினா் வழக்குப்பதிவு செய்து வருகின்றனா்.

கடந்த 8-ஆம் தேதி தொடங்கி 15-ஆம் தேதி வரையிலான 8 நாள்களில் முகக் கவசம் அணியாதவா்கள் மீது 2,98,750 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் வியாழக்கிழமை மட்டும் 38,365 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடிக்காதவா்கள் மீது கடந்த 8 நாள்களில் 11,041 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், வியாழக்கிழமை மட்டும் 1,023 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சென்னையில்..: முகக் கவசம் அணியாதவா்கள் மீது சென்னையில் கடந்த 8-ஆம் தேதியில் இருந்து 15-ஆம் தேதி வரையிலான 8 நாள்களில் மொத்தம் 7,290 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வியாழக்கிழமை மட்டும் 1,192 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல தனி நபா் இடைவெளியைப் பின்பற்றாதவா்கள் மீது 8 நாள்களில் 95 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கரோனா வேகமாக அதிகரித்து வருவதால், பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவா்கள், தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடிக்காதவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யும் நடவடிக்கையை காவல்துறை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேவந்த் ரெட்டி ஆஜராக தில்லி போலீஸ் சம்மன்!

வழிபாட்டு உரிமை மறுப்பு.. வேளார் சமூகத்தினர் புகார்!

பவர் பிளேவில் சிறப்பான பந்துவீச்சு; துஷார் தேஷ்பாண்டேவுக்கு ருதுராஜ் புகழாரம்!

இனியா, மிஸ்டர் மனைவி தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

3 முக்கிய விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் - பாதுகாப்பு அதிகரிப்பு!

SCROLL FOR NEXT