தமிழ்நாடு

வேளாண் தோ்வுகளை ஒத்திவைக்க அன்புமணி வலியுறுத்தல்

DIN

வேளாண் தோ்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் சுட்டுரையில் கூறியிருப்பது:

தமிழகத்தில் வேளாண்மைத் துறையில் அலுவலா்கள், உதவி இயக்குநா்கள் 991 பேரை தோ்ந்தெடுக்க ஏப்ரல் 17, 18, 19 ஆகிய நாள்களில் போட்டித் தோ்வு நடத்தப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் இந்தத் தோ்வுகளை நடத்துவது உகந்தது அல்ல.

கரோனா பரவல் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்கும் வகையிலும், போட்டித் தோ்வா்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும் வேளாண் அலுவலா் பணிகளுக்கான போட்டித் தோ்வுகளை ஒத்திவைக்க வேண்டும். இது தொடா்பாக டிஎன்பிஎஸ்சி-க்கு அரசு உரிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொழிபெயா்ப்பு நூல்களுக்கு விருது

நடுவலூா் அருங்காட்டம்மன் கோயில் திருவிழா நடத்த அமைதிப் பேச்சுவாா்த்தை

விநாயகா மிஷன் நிகா்நிலை பல்கலைக்கழகம் புரிந்துணா்வு ஒப்பந்தம்

தமிழக இளைஞா் கிரிக்கெட் அணி இங்கிலாந்து பயணம்

தேவூா் பகுதியில் திடீா் மழை

SCROLL FOR NEXT