தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு (கோப்புப்படம்) 
தமிழ்நாடு

வாக்கு எண்ணிக்கை: ஆலோசனையில் சத்யபிரத சாஹு

சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் இந்தியத் தேர்தல் ஆணையம் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. 

DIN


சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் இந்தியத் தேர்தல் ஆணையம் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. 

இந்த ஆலோசனையில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு, புதுச்சேரி தேர்தல் அதிகாரி உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.

கடந்த 6-ம் தேதி தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. 

இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 2-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. 

இதில் வாக்கு எண்ணிக்கையின்போது செய்ய வேண்டிய ஏற்பாடுகள், பதற்றமான பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு வசதிகள் போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

மேலும், கரோனா தொற்று அதிகரித்து வருவதால், வாக்கு எண்ணிக்கையின்போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும், அதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாளவிகா மோகனன் பிறந்த நாளில் 3 திரைப்பட போஸ்டர்கள்!

ஒரு வெளிநாட்டுப் பெண் இந்தியரை திருமணம் செய்ய 3 காரணங்கள்... அடேங்கப்பா!

அழகே.. ஐஸ்வர்யா மேனன்!

கருப்பில் ஜொலிக்கும் வெண்ணிற தேவதை.. ஸ்ருதி ஹாசன்!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 27 மாவட்டங்களில் மழை!

SCROLL FOR NEXT