முகப்பு
தமிழ்நாடு

கோட்டூரில் ரசாயன உர விலையை ரத்து செய்ய வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அடுத்துள்ள கோட்டூரில் ரசாயன உரங்களின் விலை உயர்வை நிரந்தரமாகத் திரும்பப் பெற வலியுறுத்தி, செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:03 PM
கோட்டூரில் வேளாண்மை விரிவாக்கம் மையம் அருகே விவசாயிகள் சங்கத்தினரின் ஆர்ப்பாட்டம்
பகிர்:

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அடுத்துள்ள கோட்டூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், மத்திய அரசு வேளாண்மை ரசாயன உரங்களின் விலை உயர்வை நிரந்தரமாகத் திரும்பப் பெற வலியுறுத்தி, செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

உர ஆலைகளுக்கு மத்திய அரசு கொடுக்கவேண்டிய உர மானியத்தைப் பல மடங்கு குறைத்ததால் வரலாறு காணாத விலையில் வேளாண்மைக்கு அடிப்படையான டி ஏ டி, பொட்டாஷ், காம்ப்ளக்ஸ் உரங்கள் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால், இதுவரை கட்டுப்படியான விலையில் கிடைக்காது தவிக்கும் விவசாயிகளுக்கு இனி விளை பொருள்களின் மூலம் கிடைக்கும் வருமானம் சராசரி 65 சதம் குறையும்  இது விவசாயிகளை நிலத்திலிருந்து வெளியேற்றும் செயலாகும். தற்போது, இந்தியா முழுவதும் வந்த எதிர்ப்பால் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது என்பது. சட்டப்பேரவை தேர்தல் முடியும் வரை தான். எனவே, இதை நிரந்தரமாகக் கைவிட வேண்டும்.

புயல் மழை பாதிப்பின் தீவிரத்தை விவசாயிகளின் போராட்டங்களால் உணர்ந்த மத்திய அரசு நூறு சதம் நிலங்களுக்கும் எஞ்சிய நிவாரண தொகையை வழங்கிட அறிவித்தது. தேர்தல் நடத்தை விதிகள் நிறுத்தப்பட்டது. வாக்குப்பதிவு முடிந்துவிட்டதால் நிவாரணத் தொகையை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோட்டூர் வேளாண்மை விரிவாக்க மையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலர் பி. பரந்தாமன், ஒன்றிய தலைவர் கே .எம். அறிவுடைநம்பி ஆகியோர் தலைமை வகித்தனர். கோரிக்கைகளை விளக்கி ,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலரும் திருத்துறைப்பூண்டி தொகுதி வேட்பாளருமான க. மாரிமுத்து  பேசினார்.

இதில், சிபிஐ ஒன்றிய துணைச் செயலர் எம்.செந்தில்நாதன், ஒன்றியக்குழு தலைவர் எம்.மணிமேகலை, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் இ.மஞ்சுளா, விவசாயச் சங்க மாவட்ட துணைத் தலைவர் வி. விஸ்வநாதன், மாவட்டத் துணைச் செயலர் பி. சௌந்தரராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முன்னதாக ,கோட்டூர் பேருந்து நிலையத்திலிருந்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஊர்வலமாக வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →