முகப்பு
தமிழ்நாடு

கேரளம் செல்லும் தோட்டத் தொழிலாளர்களுக்கு கரோனா சோதனை

தேனி மாவட்டத்தில் இருந்து கேரளம் செல்லும் ஏலத்தோட்ட தோட்டத் தொழிலாளர்களுக்கு கரோனா சோதனையை காமயகவுண்டன்பட்டியில் புதன்கிழமை செய்து கொண்டனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:03 PM
கேரளா செல்லும் தோட்டத் தொழிலாளர்களுக்கு கரோனா சோதனை
பகிர்:

தேனி மாவட்டத்தில் இருந்து கேரளம் செல்லும் ஏலத்தோட்ட தோட்டத் தொழிலாளர்களுக்கு கரோனா சோதனையை காமயகவுண்டன்பட்டியில் புதன்கிழமை செய்து கொண்டனர்.

தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டி அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் கேரளாவிற்கு ஏலத் தோட்டத்திற்கு வேலைக்குச் செல்லும் பெண்கள் மற்றும் ஆண் தொழிலாளர்களுக்கு கரோனா பரிசோதனை கட்டாயம் மேற்கொண்டனர்.

நாராயணத்தேவன்பட்டி, சுருளிப்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி ஆகிய கிராமங்களைச் சேர்ந்தவர்கள் பரிசோதனைக்காக ஆரம்பச் சுகாதார நிலையத்திற்கு வந்திருந்தனர்.

மருத்துவ அலுவலர் சுதா, ஆய்வக நுட்பனர் பானு, செவிலியர்கள் செல்வி, மற்றும் பயிற்சி செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள் அமரேசன், சூர்யகுமார் ஆகியோர் 100க்கும் மேலானவர்களுக்குச் சோதனை செய்தனர்.

சித்த மருத்துவர் சிராஜ்தீன் தொழிலாளர்களிடம், கரோனா விழிப்புணர்வு பற்றிப் பேசினார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →