முகப்பு
கோப்புப்படம்
தமிழ்நாடு

சீர்காழி: கடன் பிரச்னையால் தாய்-மகன் தற்கொலை

சீர்காழி அருகே கடன் பிரச்னை காரணமாக தாய் - மகன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு

சீர்காழி: கடன் பிரச்னையால் தாய்-மகன் தற்கொலை

சீர்காழி அருகே கடன் பிரச்னை காரணமாக தாய் - மகன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:04 PM
கோப்புப்படம்
பகிர்:

 சீர்காழி:  சீர்காழி அருகே கடன் பிரச்னை காரணமாக தாய் - மகன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 தியாகராஜன் நகரில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள் சாந்தி ( 58). இவரது மகன் ராம்குமார்( 27) ராம்குமார் க்கு திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் இன்று இவர்களின் வீடு நேரமாகியும் கதவு திறக்காததால் அக்கம்பக்கத்தினர் சந்தேகம் ஏற்பட்டு சென்று  பார்த்தபோது சாந்தியும் அவரது மகன் ராம்குமாரும் வெவ்வேறு பகுதிகளில் வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார்.

இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி காவல் ஆய்வாளர் ராமமூர்த்தி மற்றும் போலீசார் விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி சீர்காழி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து வீட்டில் எழுதி வைக்கப்பட்ட டைரியை  கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடன் பிரச்னையால் தாய் மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

முழு கட்டுரையைப் படிக்க →