தமிழ்நாடு

ஆக்ஸிஜன், வென்டிலேட்டர் பற்றாக்குறை உள்ளதா? அரசு விளக்கமளிக்க உத்தரவு

DIN


சென்னை: தமிழகத்திலிருந்து ஆந்திரம் மற்றும் தெலங்கானாவுக்கு ஆக்ஸிஜன் மற்றும் ரெம்டெஸிவிர் மருந்துகள் அனுப்பிவைக்கப்பட்டது குறித்து தாமாக முன் வந்து விசாரணைக்கு ஏற்றது சென்னை உயர் நீதிமன்றம்.

தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வரும் ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலையிலிருந்து 45 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் ஆந்திரம் மற்றும் தெலங்கானாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது குறித்து நேற்று செய்திகள் வெளியாகின.

மேலும், தமிழகத்தில் ரெம்டிசிவர் தனி நபர்களுக்கு வழங்கப்படுவதாகவும், ஆக்சிஜன் உற்பத்தி போதுமான அளவுக்கு இருப்பதால் வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும், வெண்டிலேட்டர் பற்றாக்குறை உள்ளது எனவும் தமிழ் நாளிதழில் செய்தி வெளியாகியிருந்தது. 

இந்த செய்தியின் அடிப்படையில்  சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தாமாக முன்வந்து பொது நல வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. தற்போதைய நிலையில் குழப்பம் ஏற்படுத்துவதற்காக. இந்த வழக்கை எடுக்கவில்லை. 

மற்ற மாநிலங்களில் உள்ள நிலை இங்கு ஏற்படக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு தமிழகத்தின் நிலையை அறிய விரும்புவதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். 

மேலும், தமிழகத்தில் போதிய அளவு ஆக்ஸிஜன் உள்ளதா, வென்டிலேட்டர் பற்றாக்குறை உள்ளதா? தமிழகத்தில் போதிய அளவில் ரெம்டெஸிவிர் மருந்து இருப்பு உள்ளதா? என்பது குறித்து தமிழக அரசிடம் விளக்கம் பெற்று, இன்று மதியம் தெரிவிக்கும்படி அரசு தலைமை வழக்குரைஞர் விஜய் நாராயணிடம் அறிவுறுத்தியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தான்: மினி டிரக் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பலி

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பறக்கும் ரயில் சேவை.. ஆகஸ்ட் முதல்

SCROLL FOR NEXT