முகப்பு
தமிழ்நாடு

வாடிக்கையாளருக்கு கரோனா: தம்மம்பட்டியில் வங்கி மூடல்

தம்மம்பட்டியில் வாடிக்கையாளருக்கு கரோனா தொற்று உறுதியானதால், வங்கி மூடப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:04 PM
வாடிக்கையாளருக்கு கரோனா: தம்மம்பட்டியில் வங்கி மூடல்
பகிர்:

தம்மம்பட்டியில் வாடிக்கையாளருக்கு கரோனா தொற்று உறுதியானதால், வங்கி மூடப்பட்டது.

சேலம் மாவட்டம், தம்மம்பட்டியில் திருச்சி செல்லும் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் எதிர்புறம், ஐ.ஓ.பி. வங்கி உள்ளது. நேற்று காலை, வெளியூரைச் சேர்ந்த ஆண் வாடிக்கையாளர் ஒருவர், வங்கிக்கு வந்து சென்றுள்ளார். அவருக்கு முன்பு எடுத்திருந்த கரோனா பரிசோதனையில், தொற்று இருப்பது உறுதியானது. இந்த தகவல், தம்மம்பட்டியில் உள்ள வங்கிக்கு, உடனடியாக தெரிவிக்கப்பட்டது. 

அதையடுத்து, நேற்று பிற்பகலில் வங்கி மூடப்பட்டு, தம்மம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் சுகாதாரத்துறை பேரூராட்சி நிர்வாகத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது.  வங்கி ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள, அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்று காலை, பேரூராட்சி நிர்வாகத்தினர், வங்கியில் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்தனர். அதனால், வங்கி இன்றும் மூடப்பட்டுள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →