முகப்பு
தமிழ்நாடு

காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் லலிதா சஹஸ்ரநாம சிறப்பு ஹோமம்

கரோனா நோய்த் தொற்றிலிருந்து உலக மக்கள் விடுபட காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் லலிதா சஹஸ்ர நாம சிறப்பு ஹோமம் வெள்ளிக்கிழமை முதல் தொடங்கியது.

Updated On : 23 ஏப்ரல், 2021 at 1:18 PM
கரோனா நோய்த்தொற்றிலிருந்து மக்கள் விடுபட காமாட்சி அம்மன் கோயிலில் நடைபெற்ற லலிதா சஹஸ்ர நாம சிறப்பு ஹோமம்
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:34 AM

கரோனா நோய்த் தொற்றிலிருந்து உலக மக்கள் விடுபட காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் லலிதா சஹஸ்ரநாம சிறப்பு ஹோமம் வெள்ளிக்கிழமை முதல் தொடங்கியது.

சக்தி பீடங்களில் ஒன்றாகவும், பிரசித்தி பெற்றதுமான காமாட்சி அம்மன் கோயிலில் கரோனா நோய்த்தொற்று அச்சுறுத்தலிலிருந்து மக்கள் விடுபடவும், உலக நன்மைக்காகவும் லலிதா சஹஸ்ர நாம சிறப்பு ஹோமம் வெள்ளிக்கிழமை முதல் தொடங்கியது.15க்கும் மேற்பட்ட சாஸ்திரிகள் ஒன்றிணைந்து ஹோமபூஜையினை நடத்தினார்கள். ஹோமத்தில் பல்வேறு விதமான வாசனைத் திரவியங்கள், மஞ்சள், குங்குமம், மலர் மாலைகளை, பட்டுத்துணிகள் ஆகியனவும் ஹோமத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.

பின்னர் காமாட்சி அம்மனுக்கு சிறப்புத் தீபாராதனைகளும் நடந்தன. கரோனா நோய்த் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்க தினசரி தொடர்ந்து சிறப்பு ஹோமம் நடத்தப்பட இருப்பதாகவும் கோயில் சாஸ்திரிகள் தெரிவித்தனர். 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.