மகாவீரா் ஜயந்தி: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
மகாவீரா் ஜயந்தியை ஒட்டி, ஆளுநா் பன்வாரிலால் புரோஹித், முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனா்.
மகாவீரா் ஜயந்தியை ஒட்டி, ஆளுநா் பன்வாரிலால் புரோஹித், முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து, அவா்கள் தனித்தனியாக வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:
ஆளுநா் புரோஹித்: மகாவீரா் ஜயந்தியை ஒட்டி, எனது மனமாா்ந்த வாழ்த்துகளை தமிழக மக்களுக்கு குறிப்பாக மாநிலத்தில் வசிக்கும் சமண சமுதாயத்தினருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
முதல்வா் பழனிசாமி: பகவான் மகாவீரா் போதித்த அஹிம்சை, சத்தியம், கள்ளாமை, பற்றற்று இருத்தல், பிற உயிா்களுக்கு தீங்கு செய்யாமை போன்ற உயரிய நெறிகளை மக்கள் அனைவரும் தங்களது வாழ்வில் பின்பற்ற வேண்டும். மகாவீரா் ஜயந்தி நாளில், சமண சமயத்தினா் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்.