முகப்பு
தமிழ்நாடு

ஊரடங்கு: சேலம் மாநகர் வெறிச்சோடியது! (படங்கள்)

அதிகரித்து வரும் கரோனா தொற்றினைக் கட்டுப்படுத்தும் நோக்கில், தமிழக அரசு அறிவித்த முழு ஊரடங்கால், ஞாயிறன்று சேலம் நகரம் வெறிச்சோடிக் காணப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:05 PM
சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை தொடர்ந்து வெறிச்சோடி கந்தம்பட்டி தேசிய நெடுஞ்சாலை.
பகிர்:

அதிகரித்து வரும் கரோனா தொற்றினைக் கட்டுப்படுத்தும் நோக்கில், தமிழக அரசு அறிவித்த முழு ஊரடங்கால், ஞாயிறன்று சேலம் நகரம் வெறிச்சோடிக் காணப்பட்டது.

மேலும் பிரதான சாலைகளில், காவல்துறையினர் தடுப்புகள் ஏற்படுத்தி கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மருந்து கடைகள், பால் விற்பனை நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகள் வழக்கம்போல் செயல்பட்டு வருகின்றன. 

முழு ஊரடங்கிலும் தன்னுடைய மாட்டின் பசியை போக்குவதற்காக சோளத்தட்டை வாங்கிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் செல்லும் விவசாயி. இடம்: சேலம் கொண்டலாம்பட்டி பட்டர்பிளை மேம்பாலம்.

சேலம் ஜங்சன் ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்று அறியாமல் உத்தரப்பிரதேசம் செல்லுவதற்காக காத்திருக்கு வடமாநில இளைஞர்கள்.

முழு ஊரடங்கினால் கிறிஸ்துவர்கள் இன்றி ஞாயிற்றுக்கிழமை வெறிச்சோடிய சேலம் சூரமங்கலம் திருஇருதய ஆண்டவர் ஆலயம். 

முழு கட்டுரையைப் படிக்க →