ஸ்டெர்லைட் விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது.
சென்னை தலைமைச்செயலத்தில் நாளை காலை 9.15 மணிக்கு இந்த கூட்டம் நடைபெறுகிறது. ஆக்சிஜன் உற்பத்தி செய்ய ஸ்டெர்லைட் ஆலை வழக்கு தொடர்ந்த நிலையில் கூட்டத்தில் இதுதொடர்பாக ஆலோசிக்க உள்ளனர்.
ஸ்டெர்லைட் ஆலையில் தமிழக அரசே ஆக்சிஜன் உற்பத்தி செய்யலாமே உன உச்சநீதிமன்றம் கூறியிருந்தது. ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தொடர்பான வழக்கு நாளை விசாரணைக்கு வரவிருக்கும் நிலையில் முதல்வர் அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்புவிடுத்துள்ளார்.
கடந்த 3 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் ஆக்சிஜனை உற்பத்தி செய்து, அரசுக்கு இலவசமாக விநியோகம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் இடைக்கால மனுதாக்கல் செய்திருந்தது.
விசாரணையில், ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க மத்திய அரசு தரப்பில் அனுமதி அளிப்பதாக மத்திய அரசின் வழக்குரைஞா் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.