தமிழ்நாடு

தோ்தல் பணிகளில் சொந்த பயன்பாட்டுக்கான வாகனங்கள்: தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

DIN

சென்னை: தோ்தல் பணிகளில் வாடகை வாகனங்களுக்குப் பதிலாக சொந்தப் பயன்பாட்டு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதால் அதற்கான கட்டணத்தை வழங்கக் கூடாது என்ற கோரிக்கையைப் பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்குமாறு, தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடா்பாக, தமிழ்நாடு சுதந்திர வாடகை வாகன உரிமைகள்- ஓட்டுநா்கள் சங்கம் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, தோ்தல் பணிக்காக வாகனங்களை வாடகைக்கு எடுத்து அதிகாரிகள் பயன்படுத்தினா். அப்போது வாடகை வாகனங்களை வாடகைக்கு எடுப்பதற்கு பதிலாக, சொந்தப் பயன்பாட்டுக்கான வாகனங்களை அதிகாரிகள் வாடகைக்கு எடுத்துள்ளனா். எனவே, இது போன்ற வாகனங்களுக்கு வாடகை தொகையைக் கொடுக்கக்கூடாது என அரசுக்கு கோரிக்கை மனு கொடுத்தோம். ஆனால் இதுவரை எந்தப் பதிலும் இல்லை. எனவே, இந்த வாகனங்களுக்கு வாடகை கொடுக்க தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தனா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் மனுதாரரின் கோரிக்கை மனுவை 8 வாரங்களில் பரிசீலித்து தமிழக அரசு தகுந்த உத்தரவு பிறப்பிக்க உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய முன்னாள் அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

SCROLL FOR NEXT