அமைச்சர் ஜெயக்குமார் 
தமிழ்நாடு

கருத்து கணிப்புகளை தவிடு பொடியாக்கி அ.தி.மு.க. மீண்டும் ஆட்சி அமைக்கும்: அமைச்சர் ஜெயக்குமார்

கருத்து கணிப்புகளை தவிடு பொடியாக்கி அ.தி.மு.க. மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

DIN

கருத்து கணிப்புகளை தவிடு பொடியாக்கி அ.தி.மு.க. மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை தவிடு பொடியாக்கி மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும். 2011 மற்றும் 2016 சட்டப்பேரவைத்தேர்தலில், தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று கருத்து கணிப்பு வெளியிடப்பட்டது.
ஆனால் அ.தி.மு.க. வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது. கருத்து கணிப்புகளை கருத்து திணிப்பாகத்தான் அதிமுகவினரும் மக்களும் பார்க்கின்றனர். அதிமுக தொண்டர்கள், தேர்தல் நேரத்தில் இருந்தது போன்று, வாக்கு எண்ணிக்கை நேரத்திலும் உற்சாகத்தோடு இருக்க வேண்டும். 
தபால் வாக்குகளில் கடந்த காலங்களில் என்ன நடைமுறை பின்பற்றப்பட்டதோ, அதையே தான் பின்பற்ற வேண்டும். தேர்தல் ஆணையம் விருப்பு வெறுப்பின்றி செயல்பட வேண்டும். சுமூகமான முறையில் வாக்கு எண்ணிக்கையை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”காங்கிரஸ் செய்த துரோகம்! பராசக்தி படக்குழுவுக்கு வாழ்த்துகள்” அண்ணாமலை பேட்டி

அடுத்த 2 மணி நேரத்துக்கு 6 மாவட்டங்களில் மழை!

திமுக ஆட்சியில் அரசு மருத்துவமனையில் கூட பாதுகாப்பு இல்லை: அண்ணாமலை

"WE SHALL COME BACK!" பாதையை விட்டு விலகியது Pslv-C62! ISRO தலைவர் வி. நாராயணன்

ஜன. 23-ல் பிரதமர் மோடி தமிழகம் வருகை! ஒரே மேடையில் என்டிஏ கூட்டணி கட்சித் தலைவர்கள்!

SCROLL FOR NEXT