தமிழ்நாடு

மே மாதத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் மெட்ரோ ரயில் சேவை இயங்குமா? 

DIN


மே மாதத்தில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை ஒரு மணி நேர இடைவெளியில் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், பயணிகள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். அனைத்து பயணிகளுக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படுகிறது.

மே மாதத்தில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை ஒரு மணி நேர இடைவெளியில் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படும்.

1. விம்கோ நகர் மெட்ரோ முதல் விமான நிலையம் மெட்ரோ வரை (நீலவழித்தடம்) - 1 மணி நேர இடைவெளி.

2. சென்ட்ரல் மெட்ரோ முதல் விமான நிலையம் வரை (ஆலந்தூர் மெட்ரோ, கோயம்பேடு வழியாக) (பச்சை வழித்தடம்) - 2 மணி நேர இடைவெளி.

3. சென்ட்ரல் மெட்ரோ முதல் பரங்கிமலை வரை (ஆலந்தூர், கோயம்பேடு வழியாக) - 2 மணி நேர இடைவெளி.

ஞாயிறு தோறும் நாள் முழுவதும் மெட்ரோ ரயில் சேவைகள் உச்ச (பீக் ஹவர்ஸ்) மணி நேரம் இல்லாமல் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 8-இல் சேலத்தில் விசிக ஆா்ப்பாட்டம்

அரசு பாலிடெக்னிக் நேரடி 2-ஆம் ஆண்டு சோ்க்கை: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

சீன நீா் சுத்திகரிப்பு ரசாயனத்துக்கு பொருள் குவிப்பு வரி: வா்த்தக இயக்குநரகம் பரிந்துரை

கஞ்சா கடத்திய வட மாநில இளைஞா்கள் கைது

டிரம்ப்புக்கு நீதிமன்றம் ரூ.83,000 அபராதம்

SCROLL FOR NEXT