முகப்பு
தமிழ்நாடு

லோயர் கேம்ப் மின் நிலையத்தில் உற்பத்தி குறைந்தது

தேனி மாவட்டம் லோயர் கேம்ப்பில் உள்ள பெரியாறு மின் உற்பத்தி நிலையத்தில் மின்சார உற்பத்தி 141 மெகாவாட் குறைந்து 27 மெகாவாட் உற்பத்தி செய்யப்படுகிறது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:48 AM
பகிர்:

கம்பம்: தேனி மாவட்டம் லோயர் கேம்ப்பில் உள்ள பெரியாறு மின் உற்பத்தி நிலையத்தில் மின்சார உற்பத்தி 141 மெகாவாட் குறைந்து 27 மெகாவாட் உற்பத்தி செய்யப்படுகிறது. 

முல்லைப் பெரியாறு அணையில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகின்ற நிலையில் ஞாயிற்றுக்கிழமை அணையின் நீர்மட்டம் 136.15 அடி உயரமாகவும் (மொத்த உயரம் 142),  நீர் இருப்பு 6,156 மில்லியன் கன அடியும், அணைக்குள் நீர்வரத்து விநாடிக்கு 1,022 கனஅடியாகவும், அணையில் நீர் வெளியேற்றம் விநாடிக்கு 300 கன அடியாகவும் இருந்தது.

அணையில் சனிக்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 1,867 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் ஞாயிற்றுக்கிழமை 300 கனஅடியாக சுமார் 1,567 கன அடி நீர் குறைத்து, விநாடிக்கு 300 கனஅடியாக திறந்துவிடப்பட்டது.

இதனால் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீரால் கடந்த ஜூலை 26 முதல், லோயர் கேம்ப்பில் உள்ள 4 மின்னாக்கிகள் மூலம் விநாடிக்கு 168 மெகாவாட் மின்சார உற்பத்தி நடைபெற்று வந்தது.

இந்நிலையில் ஆக.1 முதல், விநாடிக்கு, 300 கனஅடியாக அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால், 141 மெகாவாட் மின்சார உற்பத்தி குறைந்து,  27 மெகாவாட் மின்சாரம் மட்டுமே  உற்பத்தியாகி வருகிறது.

இதுபற்றி அணை பொறியாளர் கூறும்போது,

 முல்லைப் பெரியாறு அணை நீர்பபிடிப்பு பகுதிகளில் மழை குறைந்துள்ளது,
ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி பெரியாறு அணையில் 4 மில்லி மீட்டரும், தேக்கடியில் 2.0 மி.மீ., மழையும் பெய்தது.

மேலும் உத்தமபாளையத்தில் கணவன் மனைவி மகள்  என 3 பேர், லோயர் கேம்ப் பில் ஒரு மாணவர் என மொத்தம் 4 பேர்  ஆற்றில் இழுத்துச் செல்லப்பட்டதால் அணையில் தண்ணீர் நிறுத்தப்பட்டது. பின்னர் விநாடிக்கு 300 கனஅடியாக திறக்கப்பட்டது என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.