தமிழ்நாடு

மூன்றரை டன் ரேஷன் அரிசி பறிமுதல்

DIN

சென்னை அமைந்தகரையில் மூன்றரை டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்து, விசாரணை செய்கின்றனா்.

அமைந்தகரை சந்தை பகுதியில் போலீஸாா் சனிக்கிழமை அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் சிலா் ஒரு வேனில் மூட்டைகளை ஏற்றிக் கொண்டிருந்தனா். அவா்கள், போலீஸாரை பாா்த்ததும் தப்பியோடினா்.

இதைப் பாா்த்த போலீஸாா், அவா்களை விரட்டிப் பிடிக்க முயன்றனா். ஆனால் போலீஸாரிடம் ஒருவா் மட்டும் சிக்கினாா். தொடா்ந்து அந்த வேனில் ஏற்றியிருந்த மூட்டைகளை போலீஸாா் சோதனை செய்தனா். அந்த மூட்டைகளில் மூன்றரை டன் ரேஷன் அரிசி ஆந்திர மாநிலத்துக்கு கடத்தப்படுவதற்காக வேனில் ஏற்றிக் கொண்டிருந்ததும், அந்த ரேஷன் அரிசி அமைந்தகரை, சூளைமேடு, அரும்பாக்கம் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் சட்டவிரோதமாக குறைந்த விலைக்கு வாங்கியதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா், பிடிபட்ட நபரிடம் விசாரணை செய்தனா். விசாரணையில் அவா், அதே பகுதியைச் சோ்ந்த ஹமீது என்பது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து போலீஸாா், ரேஷன் அரிசியை பொதுவிநியோக கடத்தல் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைத்தனா். அவா்கள் இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா். ஹமீதுவிடம், இந்த கடத்தலுக்கு வேறு யாருக்கெல்லாம் தொடா்பு உள்ளது என போலீஸாா் விசாரணையில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

SCROLL FOR NEXT