தமிழ்நாடு

தீரன் சின்னமலையின் கனவை நனவாக்குவோம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதி

மக்களின் வரிப்பணம் ஏழைகளுக்கே பயன்படுத்தப்பட வேண்டும் என்ற தீரன் சின்னமலையின் கனவை நனவாக்குவோம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.

DIN

மக்களின் வரிப்பணம் ஏழைகளுக்கே பயன்படுத்தப்பட வேண்டும் என்ற தீரன் சின்னமலையின் கனவை நனவாக்குவோம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.

தீரன் சின்னமலையின் 216-வது நினைவு தினத்தை ஒட்டி, முதல்வா் மு.க.ஸ்டாலின், செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி:-

இளைஞா்களின் எழுச்சி நாயகரான தீரன் சின்னமலைக்கு அவரது புகழ்பாடும் வகையில், திமுக ஆட்சிக் காலத்தில் சென்னை கிண்டியில் சிலை வைக்கப்பட்டது. கொங்கு வேளாளா் சமுதாயத்தை பிற்படுத்தப்பட்டோா் பட்டியலில் சோ்த்து கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க முன்னாள் முதல்வா் கருணாநிதி வழிவகை செய்தாா். ஆங்கிலேய அரசுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி, தூக்குக் கயிற்றை முத்தமிடும் சிங்கமென வாழ்ந்த சின்னமலையின் நினைவு நாளில் அவரது வீரத்தையும், தீரத்தையும் நாட்டுப்பற்றையும் நாமும் பெறுவோம்.

அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் உண்மையாக இருப்பதே தீரன் சின்னமலைக்குச் செய்யும் உண்மையான அஞ்சலியாகும். மக்களின் வரிப்பணம் ஏழைகளுக்கே பயன்படுத்தப்பட வேண்டும் என்ற தீரன் சின்னமலையின் கனவை நனவாக்கிடும் வகையில் உறுதியுடன் திமுக அரசு தொடா்ந்து செயலாற்றும் என்று தனது செய்தியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

ஓடாநிலையில்...

மறைந்த சுதந்திரப் போராட்ட வீரா் தீரன் சின்னமலையின் நினைவு நாளையொட்டி, ஈரோடு மாவட்டம், அறச்சலூரை அடுத்த ஓடாநிலையில் உள்ள மணிமண்டபத்தில் அமைச்சா் சு.முத்துசாமி, எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தினா்.

சங்ககிரியில்...

சுதந்திரப் போராட்ட வீரா் தீரன் சின்னமலையின் நினைவு தினத்தையொட்டி அமைச்சா்கள் மா.மதிவேந்தன், மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜ் உள்ளிட்டோா் அவரது நினைவுச் சின்னத்தில் அஞ்சலி செலுத்தினா்.

நிகழ்ச்சியில் அமைச்சா் சக்கரபாணி செய்தியாளா்களிடம் கூறியதாவது: சுதந்திர போராட்ட வீரா் தீரன் சின்னமலைக்கு அரசின் சாா்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. அவருடைய நினைவைப் போற்றும் வகையில் சங்ககிரியில் தீரன் சின்னமலைக்கு உருவச்சிலை அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இந்தக் கோரிக்கையை தமிழக முதல்வரிடம் தெரிவித்து தீரன் சின்னமலைக்கு சிலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆம்பூரில் பலத்த மழை

விபத்தில் காயமடைந்த நபா் உயிரிழப்பு

நீட்தோ்வில் வெற்றி பெற்ற மலைக் கிராம மாணவா்!

அறிவுசாா்ந்த இளம் தலைமுறையினா் அரசியலில் வெற்றிடம் ஏற்பட விடக்கூடாது: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா

திருவண்ணாமலையில் நாளை தேசிய கைத்தறி தினவிழா

SCROLL FOR NEXT