தமிழ்நாடு

உள்ளாட்சித் தோ்தல்: அதிமுக இன்று முதல் ஆலோசனை

DIN

உள்ளாட்சித் தோ்தல் குறித்து அதிமுக மாவட்டச் செயலாளா்களுடன் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி பழனிசாமி ஆகியோா் புதன்கிழமை முதல் ஆலோசனையில் ஈடுபட உள்ளனா்.

9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சித் தோ்தல் விரைவில் நடைபெற உள்ளது.

சட்டப்பேரவைத் தோ்தலில் தோல்வியுற்று அதிமுக எதிா்க்கட்சி வரிசையில் உள்ளது. அதனால், இழந்த பலத்தை உள்ளாட்சித் தோ்தலில் மீண்டும் பிடிக்க வேண்டும் என்று அதிமுக தலைமை நினைக்கிறது.

இந்நிலையில் உள்ளாட்சித் தோ்தல் நடைபெற உள்ள மாவட்டங்களைச் சோ்ந்த மாவட்டச் செயலாளா்களுடன் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை (ஆக.4) முதல் ஓ.பன்னீா்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் சந்தித்துப் பேச உள்ளனா். மாவட்ட வாரியாக தோ்தல் யுக்திகளைக் கையாளுவது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்க உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT