தமிழ்நாடு

தமிழகத்தை பிரிக்கும் திட்டமில்லை: மத்திய அரசு விளக்கம்

DIN


புது தில்லி: தமிழகத்தை இரண்டாகப் பிரிக்கும் திட்டம் எதுவும் பரிசீலனையில் இல்லை என்று மத்திய இணையமைச்சர் நித்யானந்த ராய் விளக்கம் அளித்துள்ளார்.

மத்திய இணையமைச்சர் எல். முருகனின் சுய விவரக் குறிப்பில் கொங்குநாடு என்ற வார்த்தை இடம்பெற்றிருந்த நிலையில், அது தொடர்பாக சர்ச்சை எழுந்தது.

இதையடுத்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்களவை எம்பிக்கள் பாரிவேந்தர் மற்றும் ராமலிங்கம் ஆகியோர் இது தொடர்பாக எழுத்துப்பூர்வமாக எழுப்பிய கேள்விக்கு, உள்துறை இணையமைச்சர் நித்யானந்த ராய் இன்று விளக்கம் அளித்துள்ளார்.

அதில், தமிழ்நாட்டை இரண்டாகப் பிரிக்கும் திட்டம் எதுவும் தற்போது பரிசீலனையில் இல்லை என்று தெரிவித்திருந்தார். இதன் மூலம், கொங்குநாடு விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை: நாளை(மே 20) உதகை மலை ரயில்கள் ரத்து

ஜுன் 4ம் தேதி முடிவுகள் நிர்ணயிக்கப்பட்டுவிட்டது: பிரியங்கா காந்தி

இவருக்கு பந்துவீசவே பயமாக இருக்கிறது; இளம் வீரருக்கு பாட் கம்மின்ஸ் பாராட்டு!

இந்தியன் -2 முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு

ஈரான் அதிபா் ரய்சி பயணித்த ஹெலிகாப்டா் விபத்து

SCROLL FOR NEXT