கோவையில் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன் 
தமிழ்நாடு

கரோனா காலத்தில் அரசு இன்னும் தீவிரமாக செயல்பட வேண்டும்: கமல்ஹாசன்

கரோனா காலத்தில் அரசு இன்னும் தீவிரமாக செயல்பட வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

DIN

கரோனா காலத்தில் அரசு இன்னும் தீவிரமாக செயல்பட வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

கோவையில் கமல்ஹாசன் செய்தியாளர்களை செவ்வாய்க்கிழமை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: 

நேர்மையாக எங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி. அவர்களுக்கும் ஜனநாயகத்திற்கும் வணக்கம் தெரிவிக்க கோவை வந்துள்ளேன்.

கோவையில் மக்களை நான் சந்தித்து நன்றி கூற இருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டது மக்களை எண்ணித்தான். மக்களின் நலன் பார்த்தே ஆளுங்கட்சி செயல்பட்டு வரும் நிலையில் அழுத்தம் எதுவும் கொடுக்கவில்லை.

கொங்குநாடு அரசியல் கோஷம் மட்டுமே, மக்கள் தேவை அல்ல. கோவை மக்களுக்கு திட்டங்களில் பிரிவினை பார்க்கப்படுகிறது. உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் பங்கு மட்டுமே இருக்க வேண்டும். 

மேலும் ஈஸ்ட் இண்டியன் கம்பனி போல, வடக்கில் பாஜக எனும் வடக்கிந்திய கம்பனி தயாராகி வருகிறது. மேகதாது விஷயத்தில் பாஜக இரட்டை வேடம் போடுகிறது.

கரோனா நடவடிக்கையில் ஆளுங்கட்சி முடிந்ததை செய்கிறது. இன்னும் அதிகமாக, தீவிரமாக செயல்பட வேண்டும்.

தோல்வியை சினிமாவிலும் கற்றிறுக்கிறேன். கோவை மக்கள் எங்களுக்கு நம்பிக்கையை அளித்துள்ளார்கள். இழந்த அரசியல் மாண்பை மீட்டெடுப்பது எங்கள் பணி. தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை ஏமாற்றுவது தமிழகத்தில் உள்ள கட்சிகளுக்கு புதிதல்ல.  பென்னிகுயிக் சிலையை இடமாற்றுவதை அரசு கைவிட வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போவோமா ஊர்கோலம்... அஹானா கிருஷ்ணா!

மரகதப் பறவை... பிரணிதா சுபாஷ்!

உனக்காக என் மனைவியைக் கொன்றேன்! பல பெண்களுக்கு அனுப்பிய பெங்களூரு டாக்டர்!!

TVK Vijay full speech - முதல்வருக்கு சில கேள்விகள்! | TVK | Vijay

இதையெல்லாம் நம்பாதீங்க... ராஜாசாப் படக்குழு அறிக்கை!

SCROLL FOR NEXT