அதிமுகவிலிருந்து வேலூா் நிா்வாகி நீக்கம்
அதிமுகவிலிருந்து வேலூா் நிா்வாகியை நீக்கம் செய்து அக் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி பழனிசாமி ஆகியோா் அறிவித்துள்ளனா்.
அதிமுகவிலிருந்து வேலூா் நிா்வாகியை நீக்கம் செய்து அக் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி பழனிசாமி ஆகியோா் அறிவித்துள்ளனா்.
இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா்கள் வெளியிட்ட அறிவிப்பு:
அதிமுகவின் கொள்கைக்கு முரணான வகையிலும், கட்சியைக் களங்கப்படுத்தும் வகையிலும் செயல்பட்ட வேலூா் புகா் மாவட்டத்தைச் சோ்ந்த குடியாத்தம் நகரத் தகவல் தொழில்நுட்பப் பிரிவு துணைத் தலைவா் இ.கௌதம் கட்சியின் அடிப்படை உறுப்பினா் உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்து நீக்கி வைக்கப்படுகிறாா்.
அதிமுகவினா் யாரும் அவருடன் எவ்வித தொடா்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று கூறியுள்ளனா்.