கடலூரில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு கரோனா தடுப்பூசி முகாம் தொடக்கம்
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மூன்றாம் பாலினர் நலவாரியத்தின் மூலம் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு கரோனா தடுப்பூசி முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.பாலசுப்ரமணியம் தலைமையில் நடைபெற்றது.
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மூன்றாம் பாலினர் நலவாரியத்தின் மூலம் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு கரோனா தடுப்பூசி முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.பாலசுப்ரமணியம் தலைமையில் நடைபெற்றது.
தமிழக முதல்வரின் உத்தரவுப்படி, கடலூர் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் திட்டமான மூன்றாம் பாலினர் நலன் திட்டத்தில் தமிழ்நாடு மூன்றாம் பாலினர் நல வாரியத்தின் மூலமாக அடையாளம் காணப்பட்டுள்ள குடும்ப அட்டை பெறாத, வாரியத்தின் மூலம் அடையாள அட்டை பெற்றுள்ள மற்றும் அடையாள அட்டை பெறாத மூன்றாம் பாலினத்தவர்களுக்கு முதற்கட்டமாக கோவிட்- 19 நிவாரண நிதியுதவி 353 மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தலா ரூ.2000 வீதம் ரூ.7,06,000 (ரூபாய் ஏழு இலட்சத்து ஆறாயிரம் மட்டும்) நிதி ஒதுக்கீட்டில் 238 மூன்றாம் பாலினத்தவர்கள் பயன் பெற்றுள்ளார்கள்.
மேலும் இரண்டாம் கட்டமாக கோவிட்-19 நிவாரண நிதியுதவி 347 மூன்றாம் பாலினத்தவர்கள் தலா ரூ.2000 வீதம் ரூ.6,94,000 (ரூபாய் ஆறு இலட்சத்து தொண்ணூற்று நான்காயிரம் மட்டும்) நிதி ஒதுக்கீட்டில் 190 மூன்றாம் பாலினத்தவர்கள் பயன் பெற்றுள்ளார்கள்.
கடலூர் மாவட்டத்தில் 401 மூன்றாம் பாலினத்தவர்கள் உள்ளனர். அவர்களில் 48 பேர் குடும்ப அட்டை வைத்துள்ளனர். மூன்றாம் பாலினர் நலவாரியம் மூலம் 280 பேர் அடையாள அட்டை பெற்றுள்ளனர். அடையாள அட்டை பெறாத மூன்றாம் பாலினத்தவர்கள் 121 பேர் உள்ளனர். தமிழ்நாடு மூன்றாம் பாலினர் நல வாரியத்தின் மூலமாக அடையாள அட்டை பெற்ற மூன்றாம் பாலினர்களில் முதற்கட்டமாக கரோனா தடுப்பூசி முகாம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இந்த முகாமில் மூன்றாம் பாலினத்தவர் 100 நபர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்படவுள்ளது.