தமிழ்நாடு

பொன்னேரி: விளைநிலங்களில் எண்ணெய் குழாய் பதிக்க விவசாயிகள் எதிர்ப்பு

DIN


விளைநிலங்களில் எண்ணெய் குழாய் பதிக்க விவசாயிகள் எதிர்ப்பு. விவசாயம் பாதிக்கும் என்பதால் அரசு புறம்போக்கு நிலத்தின் வழியே திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தல். 

திருவள்ளூர் மாவட்டம் எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் இருந்து தூத்துக்குடிக்கு கொண்டு செல்லப்படும் எண்ணெய் குழாய் திருக்கண்டலம் பகுதியில் இருந்து தேர்வாய்கண்டிகைக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டு இந்தியன் ஆயில் நிறுவனம் அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது.

பொன்னேரி அடுத்த ஆரணி, பாலவாக்கம் கிராமத்தில் விவசாய நிலங்களை கையகப்படுத்தி இழப்பீடு வழங்குவதற்காக அதிகாரிகள் வந்திருந்தனர். அங்கு திரண்ட விவசாயிகள் விளை நிலங்களில் எண்ணெய் குழாய்களை பாதிப்பதால் விவசாயம் பாதிக்கப்படும் சூழல் ஏற்படும் எனவும், குறிப்பிட்ட தோட்டக்கலை பயிர்களை பயிரிடவும் இந்த திட்டத்தில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினர். 

மேலும் வருங்காலங்களில் தங்களுடைய நிலங்களில் வீடுகளை கூட கட்ட முடியாத சூழல் ஏற்படும் எனவும் ஆதங்கம் தெரிவித்தனர். விளை நிலங்களை கையகப்படும் திட்டத்தை கைவிட்டு அரசு புறம்போக்கு நிலம் வழியாக எண்ணெய் குழாய் பாதிக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். 

தங்களுடைய விவசாய நிலங்களில் எண்ணெய் குழாய் பதிக்க கூடாது என திட்டவட்டமாக எதிர்ப்பு தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடரும் இஸ்லாமிய வெறுப்புப் பிரச்சாரம்.. சர்ச்சையில் பாஜக!

சிரிப்பே துணை!

1983க்குப் பிறகு மழையே இல்லாத ஏப்ரல்: அனல் பறக்கும் பெங்களூரு

தமிழகத்தில் மே 3 வரை வெப்ப அலை தொடரும்!

சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 2 பேருக்கு உடல்நலக் குறைவு: உணவகத்துக்கு 'சீல்'

SCROLL FOR NEXT