தமிழ்நாடு

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கரோனா அதிகரிக்கிறது: மத்திய அரசு

DIN

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கரோனா பரவல் அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத் துறை இணை செயலாளர் லவ் அகர்வால் தெரிவித்துள்ளார். 

தில்லியில் இது தொடர்பாக அவர் பேசியதாவது, தமிழகத்தில் சென்னை, கோவை, ஈரோடு, செங்கல்பட்டு, திருவள்ளூர், புதுக்கோட்டை, அரியலூர் ஆகிய மாவட்டங்களில் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. 

கடந்த 2 வாரங்களில் நாடு முழுவதும் 37 மாவட்டங்களில் கரோனா பரவல் கணிசமாக அதிகரித்து வருகிறது. அதில் அதிகபட்சமாக கேரளம், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மாவட்டங்கள் உள்ளன. 

கேரளத்தில் 11 மாவட்டங்களும், கர்நாடகத்தில் 5 மாவட்டங்களும் கடந்த 2 வாரங்களில் அதிகமாக கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது.

நாட்டிலேயே அதிகபட்சமாக கேரளத்தில் 1,77,091 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதம் 97.4 சதவிகிதமாக அதிகரித்துள்ளது என்று கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோயில் காவலாளி அடித்துக் கொலை

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

மண் கடத்தல்: பொதுமக்களை மிரட்டிய நபா் கைது

இரு கட்டத் தோ்தலும் பாஜகவுக்கு சாதகம்: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT